திருமணக் கோலத்தில் வந்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் மணமக்கள் கரோனா நிவாரண நிதி வழங்கினர்.
விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டியைச் சேர்ந்த ராஜி என்பவரது மகன் ஹரிபாஸ்கர். இவர், நகைகள் செய்யும் வேலை செய்து வருகிறார். இன்று (மே 17) இவருக்கும், மணலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரது மகளான சாருமதிக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கரோனா இரண்டாம் அலை பரவி வருவதால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதில், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்குக் குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், அருகில் உள்ள கோயிலில், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ள, மிக எளிமையான முறையில் இன்று (மே 17) ஹரிபாஸ்கர்- சாருமதி திருமணம் நடைபெற்றது. இதனால், தமது திருமணத்திற்காகச் சேமித்து வைத்த பணத்தில் ரூ.51,000-ஐ, தமிழக அரசின் கரோனா நிவாரணத்திற்காக விழுப்புரத்தில் உள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டுக்குச் சென்று மணமக்கள் வழங்கினர்.
» ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்கு வீடு வீடாக மளிகை, காய்கறி விற்பனை: தமாகா யுவராஜா வேண்டுகோள்
» 30க்கும் மேற்பட்டோர் மொத்தமாகப் பதிவு செய்தால் நேரில் வந்து தடுப்பூசி: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
அதனைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் பொன்முடி மணமக்களை வாழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago