அதிமுகவின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயும், அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என, ஓபிஎஸ் - ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (மே 17) கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு:
"அதிமுகவின் சார்பில் கரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயும், அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும்.
கரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு, மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அதிமுகவின் சார்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் அளிக்கப்படும்.
» கீழ்ப்பாக்கம், மதுரை உள்ளிட்ட 8 அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் மாற்றம்: அரசு உத்தரவு
மேலும், அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும், கரோனா நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.
இப்பெருந்தொற்றின் முதல் அலை மக்களைத் தாக்கிய நேரத்தில், கடந்த ஆண்டு அதிமுகவின் சார்பில் தமிழ்நாடு அரசிடம் 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இப்பொழுது அரசிடம் அதிமுகவின் சார்பில் வழங்கப்படுகின்ற 1 கோடி ரூபாய் மற்றும் அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் ஆகியவற்றோடு, ஆங்காங்கே அதிமுக உடன்பிறப்புகள் தங்கள் பகுதிகளில் அல்லலுறும் மக்களுக்கு கொடைக்கரம் விரித்து நீட்டி நம் கொள்கை வழி நின்று மக்களின் துன்பம் துடைத்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
'கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே, இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே, ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே' என்ற எம்ஜிஆரின் கொள்கை வழி நின்று அதிமுக உடன்பிறப்புகள் நிவாரணப் பணிகளில் அக்கறை கொள்ளுங்கள் என்று ஜெயலலிதாவின் பெயரால் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்".
இவ்வாறு ஓபிஎஸ் - ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago