முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இடதுசாரி கட்சிகள் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

By செய்திப்பிரிவு

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளன.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நேற்று (மே 16) மட்டும் தமிழகம் முழுவதும் 33,181 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 6,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 311 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 17,670 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கரோனா சிகிச்சை மற்றும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்துப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், தொழில் துறையினர் உள்ளிட்டோர், முதல்வரைச் சந்தித்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், இன்று (மே 17) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர், முதல்வரைத் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நிதியுதவி

அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்