கரோனா பாதித்தவர்களுக்கு வழங்கப்படும் உயிர்காக்கும் மருந்துக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பரவல் மிகவேகமாக அதிகரித்து வரும் நிலையில், உயிர் காப்பதற்கான, ஏனாக்ஸாபரின் (Enoxaparin) மருந்து மிகவும்பற்றாக்குறையாக இருப்பதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவர்களின் நிலை பரிதாபமாகவுள்ளது.
கரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு ரத்தக் கட்டி ஏற்பட்டு நுரையீரல் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது. அவற்றை சரி செய்யவும் இந்த ஏனாக்ஸாபரின் மருந்து தேவைப்படுகிறது. பாதிப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த மருந்தை செலுத்த முடியாமல் மருத்துவர்கள் தவிக்கின்றனர். அரசு மருத்துவமனை மற்றும் அரசால் அமைக்கப்பட்டுள்ள, மற்ற கரோனா சிகிச்சை மையங்களிலும் மருந்து தட்டுப்பாடு கடுமையாக இருப்பதாகத் தகவல் வருகின்றன. மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாற்று மருந்து
ஏனாக்ஸாபரின் மருந்து பற்றாக்குறை நிலவினாலும் அதற்கு மாற்றாக அன்பிராக்னோட்டு ஹெப்பரின் (Unfractionated Heparin) மருந்து பயன்படுத்தப்படுகிறது. அதனால் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏனாக்ஸாபரின் மருந்து இல்லை என்ற தகவலை மட்டுமே தெரிவித்துள்ளனர். மாற்றாக அன்பிராக்னோட்டு ஹெப்பரின் (Unfractionated Heparin) மருந்தை பயன்படுத்த மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்படவில்லை.
முறையான சிகிச்சை
இதனால் மருத்துவர்கள் அந்த நோயாளிகளுக்கு பயன்படுத்த பரிந்துரைக்கவில்லை. இதனால் இதுவரை நோயாளிகளுக்கு மருந்து செலுத்தப்படாமல் உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நடப்பது என்ன என்பதை உரிய விசாரணை செய்து, நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றுசமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago