கோவையில் ரம்ஜான் பண்டிகை அன்றும் ஓய்வில்லாமல் முழுக் கவச உடை (பிபிஇ கிட்) அணிந்து கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தமுமுகவினர் நல்லடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில், அவர்களின் மத விருப்பப்படி இலவசமாக நல்லடக்கம் செய்து வருகின்றனர். கரோனா முதல் அலை தொடங்கி தற்போது வரை இதுபோன்று 187 உடல்கள் தமுமுக சார்பில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாகத் தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆசிக் அகமது, மருத்துவ அணி மாவட்டச் செயலாளர் சபீர் ஆகியோர் கூறியதாவது:
’’எங்கள் அமைப்பு சார்பில் 48 பேர் கொண்ட குழுவினர் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஒரு உடலை அடக்கம் செய்யும் குழுவில் 7 பேர் இடம்பெறுவார்கள். உடல்களை அடக்கம் செய்த பின்பு, அந்தக் குழுவினர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவார்கள். அடுத்த குழுவினர் அந்தப் பணியைத் தொடர்வார்கள்.
» 8 ஆண்டுகளுக்குப் பிறகுத் திறப்புவிழா: சிங்கம்புணரி அருகே தயாராகும் சமத்துவபுரம் வீடுகள்
» மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம்; 24 மணி நேரமும் சிகிச்சை
பெருந்தொற்றுக் காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கும் எதிர்ப்பையும் மீறி இந்த சேவையை மேற்கொண்டு வருகிறோம். ரம்ஜான் பண்டிகை அன்றும் 5 பேரின் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம். முதல் அலையைவிட கரோனா இரண்டாம் அலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, இலவச அமரர் ஊர்திகளின் எண்ணிக்கையையும் அரசு அதிகரிக்க வேண்டும். எங்கள் அமைப்பு சார்பில் இயக்கப்படும் 2 அமரர் ஊர்திகளுக்கு அரசு நிர்ணயித்துள்ளதைவிடக் குறைவான கட்டணம் வசூலித்து வருகிறோம்.
கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை ஆழமாகக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்பதால் மாநகரப் பகுதியில் அடக்கம் செய்ய மாநகராட்சி சார்பில் ஜேபிசி இயந்திரத்தை அளித்து உதவி வருகின்றனர். இதுதவிர, எங்களுக்குத் தேவையான முழுக் கவச உடை, கிருமிநாசினி, முகக்கவசம், காடாத் துணி போன்றவற்றை தற்போது சில தன்னார்வ அமைப்பினர் வழங்கி வருகின்றனர்.
எங்களுக்குப் பணமாக எதையும் அளிக்காமல் முகக் கவசம், முழு கவச உடை, கிருமிநாசினி போன்ற பொருட்களை நேரடியாக அளித்து உதவ விரும்புவோர் 7871201322 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்’’.
இவ்வாறு தமுமுகவினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago