டவ்-தே புயல் எதிரொலி: பாம்பனில் கடல் உள்வாங்கியது

By செய்திப்பிரிவு

டவ்-தே புயல் காரணமாக இன்று பாம்பனில் கடல் உள்வாங்கி நூற்றுக்கணக்கான படகுகள் தரை தட்டி நின்றன.

லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறி மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதி தீவிரப் புயலாகவும் மாறக்கூடும் எனவும் இதனால் மே குமரிக்கடல், மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் விசைப்படகு மீனவர்கள் தடைக்காலத்தில் உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர்அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை ராமேசுவரம் அருகே பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்திற்கு உள் வாங்கியது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் தரை தட்டி நின்றன. மேலும் கடற்கரையில் சிப்பிகள், சங்குகள் நீரின்றி தத்தளித்தது.

பின்பு மாலை 3:00 மணிக்கு பிறகு கடல்நீர் மட்டம் உயர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்