டிஎன்பிஎஸ்சி செயலர் உட்பட 13 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி செயலர் உட்பட 13 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவு:

மாற்றப்பட்ட அதிகாரிகளின் விவரம் வருமாறு:

1. வழிகாட்டுப் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண் இயக்குனர் பதவி வகிக்கும் நீரஜ் மிட்டல் மாற்றப்பட்டு தகவல் தொழில்நுட்பப் பிரிவு முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. சர்க்கரை ஆலை பிரிவு ஆணையர் பதவி வகிக்கும் ஆனந்தகுமார் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. சிப்காட் மேலாண் இயக்குனர் பதவி வகிக்கும் குமரகுருபரன் மாற்றப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதவி வகிக்கும் நந்தகுமார் மாற்றப்பட்டு பள்ளிக் கல்வித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. நில அளவை மற்றும் பத்திரத்துறை கூடுதல் இயக்குனர் பதவி வகிக்கும் ஜெயசீலன் மாற்றப்பட்டு மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் தகவல் தொழில்நுட்ப இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார் இவர் கூடுதலாக தமிழ் வளர்ச்சித்துறை துணைச் செயலராகவும் பதவி வகிப்பார்.

6. தோட்டக்கலை மற்றும் தேயிலை தோட்ட இயக்குனர் பதவி வகிக்கும் சுப்பையன் மாற்றப்பட்டு பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. முதல்வரின் தனிச் செயலர் 4 ஆகப் பதவி வகித்த ஜெயஸ்ரீ முரளிதரன் மாற்றப்பட்டு தொழிற்சாலைகள் துறை சிறப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் பொதுத் துறை (தேர்தல்) சிறப்புச் செயலர் பதவி வகிக்கும் ராஜாராமன் மாற்றப்பட்டு உணவுப் பொருள் வழங்கல் துறை மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. முதல்வரின் தனிப் பிரிவு செயலாளர்-1 பதவி வகித்த சாய்குமார் மாற்றப்பட்டு தமிழ்நாடு ஊரக நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. முதல்வரின் தனிப் பிரிவு செயலாளர்-2 பதவி வகித்த விஜயகுமார் மாற்றப்பட்டு (டான்சி) தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

11. சென்னை மாநகராட்சி ஆணையராகப் பதவி வகித்த பிரகாஷ் மாற்றப்பட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

12. டிஎன்பிஎல் தமிழ்நாடு அரசு மற்றும் காகித ஆலை மேலாண் இயக்குனர் பதவி வகிக்கும் சிவ சண்முகராஜா மாற்றப்பட்டு பூம்புகார் கப்பல் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

13. தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் சிவஞானம் மாற்றப்பட்டு தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்