ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தினமும் வீட்டை வெளியே வரக்கூடாது என மதுரை காவல்துறை எச்சரித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 10ம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிப் பொருட்களை மக்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் பகல் 12 மணி வரை கடைகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி மக்கள் அன்றாடம் வெளியே செல்வதையும் 12 மணி வரை ஊர் சுற்றுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மதுரை காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொது ஊரடங்கையொட்டி பொதுமக்கள் தினமும் பொருட்கள் வாங்க வெளியில் வரக்கூடாது. வீட்டு விநியோக சேவைகளை (ஹோம் டெலிவரி) பயன்படுத்திக் கொண்டு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளவேண்டும்.
மளிகைப் பொருட்கள், காய்கறிகளை தேவைக்கேற்ப அவரவர் பகுதியிலுள்ள கடைகள், தற்காலிக காய்கறி சந்தைகளை மட்டுமே வாங்கவேண்டும்.
சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், மக்கள் நெரிசல் அதிகமாக காணப்படும் சம்பந்தப்பட்ட பலசரக்கு, காய்கறி கடைகள் மூடப்படும்.
இது போன்ற அறிவுரைகளை மீறி, தேவையின்றி மாநகருக்குள் இருசக்கரம் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago