காத்திருப்போர் பட்டியலில் இருந்த 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட ஒதுக்கீடு; 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

காத்திருப்போர் பட்டியலில் இருந்த 13 ஐபிஎஸ் அதிகாரிகளை புதிய பதவிகளில் நியமித்தும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (மே 10) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"1. காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரதீப் பிலிப், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் (சென்னை) டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயந்த் முரளி, ஆயுதப்படை (சென்னை) ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3. காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ்குமார் அகர்வால், சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4. மதுரை தென்மண்டல ஏடிஜிபியாக இருந்த ஆபாஷ் குமார், பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு (சென்னை) ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஹெச்.எம்.ஜெயராமன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் (சென்னை) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6. காத்திருப்போர் பட்டியலில் இருந்த தினகரன், பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு (சென்னை) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

7. காத்திருப்போர் பட்டியலில் இருந்த லோகநாதன், ஆயுதப்படை ஐஜியாக (சென்னை) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

8. உளவுத்துறை (உள்நாட்டுப் பாதுகாப்பு) டிஐஜியாக இருந்த எஸ்.ராஜேந்திரன், காவல் துறை தொழில்நுட்ப பிரிவின் (சென்னை) டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

9. காத்திருப்போர் பட்டியலில் இருந்த மூர்த்தி, சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

10. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.செந்தில், காவலர் பயிற்சிப் பள்ளி, பேரூரணி, தூத்துக்குடி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

11. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.எஸ்.மகேஸ்வரன், மதுரை மண்டல (அமலாக்கம்) எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

12. காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருளரசு, சட்டம் - ஒழுங்கு (சென்னை) ஏஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

13. காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன், நிர்வாகப்பிரிவு ஏஐஜியாக (சென்னை) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

14. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜா, வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு (சென்னை) எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

15. காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுரேஷ் குமார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்பி-2 ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்