தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன் இன்று தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காலமானார்.
விவசாயம் செய்துவந்த பாலமுருகன், கடந்த ஓராண்டாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு வீடு திரும்பிய அவர், இன்று (மே 14) அதிகாலை காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் பெரியகுளத்தில் நடைபெறுகிறது. இவருக்கு லதா மகேஸ்வரி என்ற மனைவியும், 14 வயதில் மகளும் உள்ளனர்.
அவருடைய மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்:
» கரோனா பேரிடரின் துயரத்தை விட, மக்கள் அலைக்கழிக்கப்படுவது மிகுந்த மனவலியை ஏற்படுத்துகிறது: தினகரன்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்த நிலையில், மரணமடைந்திருப்பதை அறிந்து வேதனையுற்றேன். தகவல் அறிந்ததும் ஓ.பன்னீர்செல்வத்தைத் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினேன்.
ஓ.பாலமுருகனை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளர், அதிமுக:
ஓபிஎஸ் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று தேனி மாவட்டம், பெரியகுளத்தில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், மனவேதனையும் அடைகிறேன்.
பாலமுருகனை இழந்து வாடும் ஓபிஎஸ்ஸுக்கும், குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும், அதிமுகவின் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என்பது மூத்தோர் அனுபவம். அருமை இளவலை இழந்து வாடும் ஓபிஎஸ்ஸுக்கு அதிமுக உடன்பிறப்புகள் அனைவரும் எப்பொழுதும் அன்புத் தம்பிகளாகத் துணை நிற்போம் என்று இந்தத் துயர வேளையில் ஓபிஎஸ்ஸின் தோளோடு தோள் நின்று உறுதி கூறுகிறேன்.
மறைந்த ஓ.பாலமுருகனின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago