பொது ஊரடங்கையொட்டி மதுரையில் மக்கள் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் போலீஸ்

கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் வேகமெடுத்துள்ளது. பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

இருப்பினும், தமிழகத்தில் மே 24ம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிவது போன்ற விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

அத்தியாவசியத் தேவையைத் தவிர்த்து, பிற தேவைக்கென வெளியில் வருவோரிடம் மென்மையான அணுகுமுறையை பின்பற்றவேண்டும் என, காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் விதிமீறல் தொடர்பான வழக்கு கடந்த 3 நாட்களில் பெரியளவில் பதிப்வாகவில்லை.

வாகன பறிமுதலும் இல்லை.

இருப்பினும், மாநகர்ப் பகுதியில் ஆரப்பாளையம், பெரியார் நிலையம், ஜெய்ஹிந்துபுரம், பழங்காநத்தம் ,காளவாசல், கோரிப்பாளையம், சிம்மக்கல், மேலமடை உள்ளிட்ட முக்கிய சிக்னல் பகுதிகளில் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இது போன்ற இடங்களில் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில், மாநகர காவல் தொழில் நுட்ப பிரிவு குழுவினர் ‘ ட்ரோன்’ மூலம் கண்காணிக்கின்றனர்.

முகக்கவசம் அணிவது போன்ற அரசின் விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என, ட்ரோன் கேமராவில் பொருத்தப் பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE