ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் சார்பில் மக்களுக்கு முகக்கவசம், உணவுப் பொட்டலங்கள் அளிப்பு; தினமும் வழங்க முடிவு

By ஜெ.ஞானசேகர்

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு இன்று முகக்கவசம், கபசுரக் குடிநீர், உணவுப் பொட்டலங்கள் ஆகியன வழங்கப்பட்டன.

கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து தலைமையில் ரங்கா ரங்கா கோபுரம் நுழைவு வாயில் அருகில், பொதுமக்கள் 100 பேருக்கு முகக்கவசமும், 200 பேருக்கு கபசுரக் குடிநீரும், 440 பேருக்கு உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சையில் உள்ளோர் மற்றும் அவர்களுடன் உடனிருப்போர் தலா 100 பேருக்கு இரு இடங்களிலும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

இதேபோல், ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலின் சார்பு கோயில்களான உறையூர் அருள்மிகு ஸ்ரீநாச்சியார் கோயில், திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்சப் பெருமாள் கோயில், அன்பில் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயில் ஆகியவற்றின் மூலம் தலா 50 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் இன்று வழங்கப்பட்டன.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோயில் அலுவலர்கள் கூறும்போது, ''இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று மாநில இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு உதவும் நோக்கிலும் கோயில் நிர்வாகங்கள் சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர், உணவுப் பொட்டலங்கள் வழங்க வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளோர் மற்றும் அவர்களுடன் உடனிருப்பவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தினார்.

அதன்பேரில் இன்று மக்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர், உணவுப் பொட்டலங்கள் ஆகியன வழங்கப்பட்டன. இந்தப் பணிகள் இனி தினமும் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்