கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சீர்காழி (தனி) தொகுதியை தனது விசுவாசியும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவிந்திரனுக்கு கொடுக்க வலியுறுத்தினார் கனிமொழி. ஆனால் துர்கா ஸ்டாலினின் சிபாரிசில், முன்னாள் எம்எல்ஏ-வான பன்னீர்செல்வத்தின் பெயர் லிஸ்ட்டில் ஏறியது. இந்த விஷயத்தை தந்தை கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் கனிமொழி. மகள் சொன்னதைக் கேட்டு, கடைசி நேரத்தில் பன்னீரின் பெயரை அடித்துவிட்டு ரவிந்திரன் பெயரை எழுதினார் கருணாநிதி. கடந்த முறை அந்த அளவுக்கு செல்வாக்குடன் இருந்த கனிமொழியால் இம்முறை தனது ஆதரவாளர்கள் யாரையும் வேட்பாளராக்க முடியவில்லை. பிரச்சாரத்துக்கு மட்டுமே அவரைப் பயன்படுத்திக் கொண்டது கட்சித் தலைமை. அதே சீர்காழியில் இம்முறை ரவிந்திரனுக்கு சீட் மறுக்கப்பட்டு, துர்காவின் முந்தைய சிபாரிசான பன்னீர்செல்வத்துக்கு சீட் தரப்பட்டு அவர் எம்எல்ஏ-வும் ஆகிவிட்டார். இந்த நிலையில், சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் இமையத்தின் தம்பியான சி.வி.கணேசனை அமைச்சராக்கியதில் கனிமொழியின் சிபாரிசும் இருந்ததாகச் சொல்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்