அமமுக வேட்பாளர் சேகர் கணிசமாக வாக்குகளை பிரிப்பார் என்பதால், இந்த முறையும் ஒரத்தநாட்டில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தேறமாட்டார் என்றே கருத்துக் கணித்தார்கள். ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கி 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார் வைத்தி. இதற்காக அவர் கொடுத்த விலை மிகப்பெரியது என்கிறார்கள். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் அமைச்சர் பதவியில் உட்காரலாம் என்றெல்லாம் கணக்குப் போட்ட வைத்திலிங்கம், ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் வீதம் இரண்டு லட்சம் ஓட்டுக்கு பட்டுவாடா செய்தாராம். வைத்தியின் தாராள கவனிப்பில், ஓட்டுகள் அதிகம் உள்ள வீடுகளுக்கு அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லம்ப்பாக கிடைத்ததாம். ஆனால், 2 லட்சம் பேருக்கு ‘கவனிப்பு மேளா’ நடத்தியும் சுமார் 90 ஆயிரம் பேர் மட்டுமே வைத்திக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது ஷாக்கான செய்தி.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்