ஸ்டாலின் முன்னிலையில் பொன்முடிக்கு சவால்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு

By செய்திப்பிரிவு

தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச் சர் பொன்முடியிடம்”என்னுடன் போட்டியிட முடியுமா?” என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சவால் விட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பொன் முடியின் இல்ல திருமணம் திங்கள்கிழமை விழுப்புரத்தில் நடந்தது. இத்திருமண விழாவை தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் நடத்திவைத்தார். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு நாடாளுமன்றத் தொகுதியிலும் நாங்கள் வென்றுவிடுவோம். இதில் என்னுடன் போட்டியிட தயாரா?” என பொன்முடிக்கு சவால்விட்டு பேசினார்.

இதையடுத்து திருமணத்தை நடத்திவைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சீர்திருத்த திரு மணங்கள் நடத்த சிரமமாக இருந்த காலகட்டதில் அதை அங்கிகரித்தது 1967-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள்தான். பெண் களுக்கு சம உரிமை வழங்கியதும் திராவிட கட்சிகளே. கடலூரைச் சேர்ந்த எம்.ஆர்.கே. பேசும்போது இரண்டு தொகுதிகளை வென்று காட்டுகிறாம் என சொன் னார். இரண்டு தொகுதிகள் மட்டுமல்ல 40 தொகுதிகளிலும் வென்றாகவேண்டும் என்பதை போட்டியாக எண்ணுங்கள்” என ஸ்டாலின் பேசினார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு நாடாளுமன்றத் தொகுதியிலும் நாங்கள் வென்றுவிடுவோம். இதில் என்னுடன் போட்டியிட தயாரா?”

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்