ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் பணிபுரிய பிட்டர் பயிற்சி முடித்தவர்களுக்கு வாய்ப்பு

By எம்.நாகராஜன்

கரோனா நோயாளிகளை காக்க கூடுதலாக திறக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் உதவியாளராக பணிபுரிய, பிட்டர் பயிற்சி முடித்தவர்கள் அதிக அளவில் தேவைப்படுவதாக பயிற்சி மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா 2-வது அலை மக்களை அச்சுறுத்தும் வகையில், உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், ஆக்சிஜன் தட்டுப்பாடால் மக்கள் உயிரிழப்பதை தடுக்க, கூடுதல் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை, மதுரை, கோவைஉட்பட 14 இடங்களில் ஆக்சிஜன்உற்பத்தி ஆலைகளைத் தொடங்கபோர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆலைகளில் உதவி யாளராக பணிபுரிய அதிகஅளவில் ஆட்கள் தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 2018-19ம் ஆண்டுகளில் பிட்டர் பயிற்சி நிறைவு செய்து, தற்போது பணியில் இல்லாத நபர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உடுமலை அரசு ஐடிஐ பணியமர்த்தும் அலுவலர் ரமேஷ்குமார் கூறும்போது, "ஆக்சிஜன் உற்பத்தி தேவை அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதற்கு தொழில்நுட்ப உதவியாளர்கள் தேவைப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள ஐடிஐ-களில் 2018-19-ல் பிட்டர் பயிற்சியை நிறைவு செய்து, பணியில் இல்லாமல் இருப்பவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அரசு சார்பில் பயிற்சியாளர்களின் விவரம் கேட்கப்பட்டுள்ளது.

இது முழுக்க, முழுக்க அரசுப் பணி என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், மாநிலம் முழுவதும் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்களின் விவரங்கள்சேகரிக்கப்பட்டு சுகாதார துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொலைபேசியிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9442178340, 9095905006 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்