விசிக சட்டப்பேரவை குழுத் தலைவராக சிந்தனைசெல்வன் தேர்வு

By செய்திப்பிரிவு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவராக சிந்தனைசெல்வன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலை விசிக திமுக கூட்டணியுடன் கைகோத்து எதிர்கொண்டது. விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 4 தொகுதிகளில் அக்கட்சி வாகை சூடியது.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் பங்கேற்ற, கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ‘சட்டமன்றக் கட்சிக்கான’ நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, விசிக சட்டப்பேரவை குழுத் தலைவராக காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ., சிந்தனைசெல்வன் தேர்வு செய்யப்பட்டார்.

துணைத் தலைவர்களாக நாகப்பட்டினம் எம்.எல்.ஏ., ஜெ.முகமது ஷாநவாஸ், செய்யூர் எம்.எல்.ஏ., மு.பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கட்சியின் கொறடாவாக திருப்போரூர் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜி தேர்வு செய்யப்பட்டார்.

இத்தகவலை கட்சித் தலைமையகம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்