தமிழக சட்டப்பேரவை கூடியது: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை தொடங்கியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை தற்காலிகத் தலைவர் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. கடந்த 7-ம் தேதி முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் அவருடன் 33 அமைச்சர்களும் பதவி யேற்றனர். சட்டப்பேரவை முன்னவராக அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு கொறடாவாக திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி.செழியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெற்றி பெற்றவர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்பதற்காக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன்

சட்டப்பேரவை தற்காலிகத் தலைவர் எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது வழக்கம்.

அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

அதன்படி, பேரவை தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்ட கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார். எம்எல்ஏக்கள் பதவியேற்பு முடிந்தும் சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் நாளை நடக்க உள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்