புதுச்சேரி ஆளுநர் தமிழிசைக்கு கரோனா தொற்று இல்லை: மருத்துவப் பரிசோதனை முடிவில் தகவல்

By அ.முன்னடியான்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கரோனா பரிசோதனை செய்து கொண்ட நிலையில், அவருக்குத் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது.

புதுச்சேரி முதல்வராக கடந்த 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். ஆனால், கடந்த சில நாட்களாவே அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், உடனே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வரின் உடல் நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் இன்று (மே.10) கேட்டறிந்தார். மேலும், அவர் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்ற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு கரோனா அறிகுறி இல்லாத நிலையிலும், கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட போதிலும் இன்று கரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதன் முடிவு மாலையில் வெளியானது. அதில் துணைநிலை ஆளுநருக்குத் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் முகக்கவசம் அணிவது எளிதான பாதுகாப்பு. தடுப்பூசி போடுவது விஞ்ஞானப்பூர்வமான பாதுகாப்பு. கரோனா தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார் எனத் துணைநிலை ஆளுநர் செயலகம் தகவல் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்