கரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய பிணக் கிடங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
கோவையில் தினந்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (மே.10) ஒரே நாளில் மட்டும் 2,781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு அதிகரிப்புக்கு ஏற்ப, உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிணக் கிடங்கில் உடல்கள் தேக்கமடைந்தன.
பிணக் கிடங்குக்கு வெளிப்புறத்திலும் திறந்த வெளியில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் நேரடியாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. அரசு வழிகாட்டுதல்களின்படி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தொற்று பரவாமல் இருக்க முகம் மட்டும் தெரியும் வகையில் மற்ற உடல் பாகங்களை ரேப்பரால் மூடிவிடுகின்றனர்.
பின்னர், மாநகராட்சிப் பணியாளர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது. மேலும், மின்மயானங்களில் எரியூட்டப்படும் உடல்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாலும், குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே எரிக்க அனுமதிக்கப்படுவதாலும், உடல்கள் தேக்கமடைகின்றன.
எனவே, உடல்களை வைப்பதற்கு புதிய இடத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக சுமார் 50 உடல்களை வைக்க ஏதுவாக ஷெட் அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago