யார் எதிர்க்கட்சித் தலைவர் என்பதில் அதிமுகவுக்குள் நடக்கும் கோஷ்டி யுத்தம் சாமானியத்தில் முடியாது போலிருக்கிறது. 7-ம் தேதி நடந்த எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், “எல்லாமே நாங்கள் தான் என்று சொல்லி உங்கள் இஷ்டத்துக்கு செயல்பட்டு, உங்கள் நோக்கம் போல் வேட்பாளர்களை தேர்வுசெய்து தேர்தலை நடத்தினீர்கள். இப்போது கட்சி தோற்றுவிட்டது. இதற்கான காரணத்தைச் சொல்லிவிட்டு எதிர்க்கட்சி தலைவர் தேர்வைப் பற்றி பேசுங்கள்” என்று ஈபிஎஸ், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்களை நோக்கி போர்க்கொடி தூக்கியதாம் ஓபிஎஸ் கோஷ்டி. இன்னும் சிலரோ, “கொஞ்சம் விட்டுருந்தா கட்சியவே கொங்கு அதிமுகன்னு மாத்திருப்பாங்க போலிருக்கு” என்று கொந்தளித்தார்களாம். ஆனாலும், தன்னை ஆதரிக்கும் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் எப்படியும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றிவிடலாம் என நினைக்கிறாராம் ஈபிஎஸ். அப்படி நடந்தால் ஓபிஎஸ் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் பலர் திமுகவுக்கு தாவும் முடிவில் இருக்கிறார்களாம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago