ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் தடையின்றி கிடைக்க பால் விற்பனை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, வேலூர் ஆவின் நிர்வாகம் இன்று (மே 09) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
"வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் இருந்து தினந்தோறும் பால் கொள்முதல் செய்யப்பட்டு, உள்ளூர் விற்பனைக்காக சுமார் 60 ஆயிரம் லிட்டரும், பால் உப பொருட்கள் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக, மே 10-ம் தேதி (இன்று) முதல் 24-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
» சமூக நீதி; மாநில உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுக்க அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தேவை: ராமதாஸ்
» சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மாற்றம்: புதிய ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்
எனவே, பொது முடக்கக் காலத்தில், ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் தடையின்றி கிடைக்க ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு பால் விற்பனை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம்:
வேலூர் பகுதிக்கு - பி.விஜயரங்கன் 94883-03158, காட்பாடி பகுதிக்கு டி.ஜெயபிரகாஷ் 82481-26101, ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு ஜி.நாகராஜன் 94863-36101, ஆம்பூர் மற்றும் குடியாத்தம் பகுதிக்கு ஜெ.வினுடேவிட் 73589-31929, திருப்பத்தூர் மாவட்டத்துக்கு ஏ.சச்சிதானந்தம் 90034-71661 என, 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் அந்தந்த பகுதிகளுக்கு ஆவின் பால் விநியோகம், பால் உப பொருட்கள் விநியோகம் சரிவர கிடைக்கவில்லை என்றால், மேற்கண்ட பால் விற்பனை அலுவலர்களை தொடர்புகொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்".
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago