கரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது? என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கவும், தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்காக 50 சதவீத படுக்கைகளை ஒதுக்கவும் கோரி மதுரையைச் சேரந்த வெரோணிகா மேரி என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
கரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், அனைத்து சுகாதார பணியாளர்கள் மற்றும் பிற முன்களப்பணியாளர்களை நீதிமன்றம் பாராட்டுகிறது.
அதே நேரத்தில் இந்த சிக்கலான நேரத்தை பயன்படுத்தி தனியார் மருத்துமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ளதை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது.
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு வாங்க வேண்டிய கட்டணம் மற்றும் தனியார் மருத்துவமனையில் 50 சதவீத படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற அரசாணைகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா? இந்த அரசாணைகள் அமல்படுத்தப்படுவதை அரசு எவ்வாறு கண்காணிக்கிறது?
அரசாணையை மீறி கரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகார் செய்யவேண்டும்? அரசாணையை மீறுவோர் மீது எந்த பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்? என்ன தண்டனை வழங்கப்படும்? அரசாணை சரியாக அமல்படுத்தப்படுகிறதா? இல்லையா? என்பதை கண்காணிக்க வேண்டியது யார்?
இதுவரை கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக எத்தனை புகார்கள் வந்துள்ளன? அந்தப்புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? உத்திரபிரதேசம், டில்லி போன்ற மாநிலங்களில் இருப்பது போல் தனியார் மருத்துவமனைகளின் படுக்கை வசதி கட்டணம் ஆகியவற்றுக்காக அரசே ஏன் தனியாக இணையதளத்தை தொடங்கக்கூடாது?
தமிழக முதல்வர் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தில் எத்தனை பேர் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெற்றுள்ளனர்? தமிழ்நாடு அரசு ஊழியர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனையில் எத்தனை பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்? என் விபரங்களை மத்திய, மாநில அரசுகள் மே 12-ல் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago