ஏப்ரல் மாதத்துக்குள் மேலும் 4 பேர் ஓய்வு: சென்னை உயர் நீதிமன்றத்தில் 38 நீதிபதி பணியிடங்கள் காலி - விரைவில் நிரப்ப வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்

By கி.மகாராஜன்

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பற்றாக்குறையால் வழக்குகள் தேங்குவதைத் தவிர்க்க, காலியாக உள்ள 38 நீதிபதி பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதி பணியிடங்கள் இருந்தன. அந்த எண்ணிக்கை 75 ஆக உயர்த் தப்பட்டுள்ளது. தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட 37 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் வரும் பிப்ரவரி மாத இறுதியில் நீதிபதி தமிழ்வாணன், மார்ச் மாத மத்தியில் நீதிபதி ஹரிபரந்தாமன், ஏப்ரல் மாதத்தில் நீதிபதிகள் பி.ஆர்.சிவகுமார், வி.எஸ்.ரவி ஆகியோர் ஓய்வு பெறுகின்றனர். இதனால் வரும் ஏப்ரல் மாதத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 33 ஆகக் குறைந்து, 42 பணியிடங்கள் காலியாகும் வாய்ப்புள்ளது.

நீதிபதிகள் பற்றாக்குறை காரண மாக வழக்குகள் தேங்குவது அதிக ரித்து வருகிறது. ஸ்கைப்பில் விசாரணை நடத்துவது, விடுமுறை நாட்களில் பணிபுரிவது, கூடுதல் நேரம் பணிபுரிவதன் மூலம் வழக்கு கள் தேங்குவது ஓரளவு சமாளிக்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 11 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான பணிகள் கடந்த ஆண்டு நடைபெற்றன. அந்தப் பட்டியலில் அனைத்து ஜாதியினருக் கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக் கப்படவில்லை என்று கூறி பட்டி யலை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொட ரப்பட்டன. அந்தப் பட்டியலுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டமும் நடத்தினர். இதனால் அந்தப் பட்டியல் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசு நீதிபதிகள் நியமன சட்டத்தை நிறை வேற்றியது. இந்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து, மத்திய அரசின் நீதிபதிகள் நியமன சட்டம் செல்லாது என அறிவித்தது.

மேலும், ‘நீதிபதிகள் நியமனத் தில் அரசியல் தலையீடு இருப்பதை அனுமதிக்க முடியாது. நீதிபதிகள் நியமனத்துக்கான கொலீஜியம் முறையில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த, மத்திய அரசும், மாநில அரசு களும், வழக்கறிஞர்கள் சங்கங்களும் உரிய கருத்துகளைத் தெரிவிக்கவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்திருந்தனர். அதன்படி வழக்கறிஞர்கள் சங்கங்களும், மத்திய அரசும் தங்கள் தரப்பு கருத்துகளை தாக்கல் செய்துள்ளன.

இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேஷன் தலைவர் எம்.சுபாஷ்பாபு நேற்று கூறிய தாவது: நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை தெரிவித்துள் ளது. அதைப் பின்பற்றி தகுதி யானவர்களை தேர்வு செய்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காலி யாக உள்ள நீதிபதி பணியிடங்கள் முழுவதையும் நிரப்புவதற்கு தலைமை நீதிபதி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நியமனம் செய்யும்போது உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.

தற்போது நீதிபதிகள் பற்றாக் குறை காரணமாக இறுதி விசார ணையை எட்டியுள்ள வழக்குகள் விசாரணைக்கு வராமல் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகின்றன. புதிதாக தாக்கல் செய்யப்படும் வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நீதிபதிகள் பற்றாக்குறையைப் போக்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்