சிறந்த நகைச்சுவை நடிகரும், ஓவியருமான பாண்டு கரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் கொடி, சின்னத்தை வடிமைத்துக் கொடுத்த பாண்டுவின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தி:
“சிறந்த நகைச்சுவை நடிகரும், ஓவியருமான பாண்டு கரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தென்னிந்தியாவிலேயே ஓவிய ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரிய பாண்டு, நகைச்சுவையில் தனக்கெனத் தனிப் பாணியை முத்திரையாகப் பதித்துப் புகழ்பெற்றவர். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமின்றி ஓவிய உலகிற்கும் பேரிழப்பாகும்.
» சீமான் தோற்பதற்காகவே கட்சி நடத்துகிறார்; காங்கிரஸ்தான் 3-வது பெரிய கட்சி: கே.எஸ்.அழகிரி தாக்கு
பாண்டுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேபோல் அதிமுகவின் கொடி, சின்னத்தை வடிவமைத்துக் கொடுத்தவர் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தி:
“கட்சியின் கொடி, சின்னத்தினை வடிவமைத்துக் கொடுத்தவரும் நகைச்சுவை, குணச்சித்திர நடிகரும், சிறந்த ஓவியருமான பாண்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்”.
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago