டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பருவத்தில் 80% மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம்: கணக்கெடுப்பை முழுமையாக மேற்கொள்ள வலியுறுத்தல்

By கல்யாணசுந்தரம்

தமிழகத்தின் நெற்பயிர் சாகுபடியில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில், வடகிழக்குப் பருவமழையால் 80 சதவீத பரப்பளவில் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித் துள்ளனர். இதனால் வெள்ள பாதிப்பு கணக்கெடுப்பை முழுமையாக மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 39 சத வீதமும், திருவாரூர் மாவட்டத்தில் 58 சதவீதமும், நாகை மாவட்டத்தில் 64 சதவீதமும் சராசரியை விட கூடுதலாக மழை பெய்தது. குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழைப் பொழிவு அதிகமாக இருந்தது.

இதன் காரணமாக சம்பா, தாளடி பருவத்தில் நெல் சாகுபடி செய்யப் பட்டுள்ள, ஏறத்தாழ 4.10 லட்சம் ஹெக்டேர் பரப்பில், பெரும்பாலான இடங்களில் மழை, வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் வரை யில் நடவு செய்த பயிர்கள் சூல், பூக்கும் மற்றும் இளம் பால் பரு வம் ஆகிய நிலைகளில் இந்த தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடவு செய்யப் பட்ட இளம் பயிர்களும் நீரில் மூழ்கி அழுகிவிட்டன. மீதமுள்ள பயிர் களும் தூர் கட்டாமல் உள்ளன.

இதன் காரணமாக ஏறத்தாழ 80 சதவீதம் அளவுக்கு விவசாயி களுக்கு மகசூல் இழப்பு ஏற்படும் என்கிறார் காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, “தொடர்ந்து வறட்சி, வெள்ளம் என விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாகப் பெய்த மழையில் நெற்பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் தாமதமாக நடவு செய்யப்பட்டு, அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் கதிர் வந்த நிலை யில் மண்ணில் சாய்ந்து முளைத்து விட்டன. பல இடங்களில் கதிர்கள் பதர்களாகவே மாறிவிட்டன. இத னால் விவசாயிகள் செய்வதறியாது கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மத்திய அரசின் பேரிடர் விதி களின்படி வறட்சி, வெள்ளம், புயல், பூகம்பம், சுனாமி, நிலச்சரிவு, தீ, பூச்சி நோய் உள்ளிட்ட 12 வகையான இயற்கை பேரிடர்களால் 33 சதவீதத்துக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டால் அதை முழுமையாக கணக்கெடுத்து முழு இடுபொருள் நிவாரணம் வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தால் மூழ்கிய நிலங்களை மட்டுமே அதி காரிகள் கணக்கெடுப்பு நடத்துவதாக பரவலாக புகார்கள் வருகின் றன.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் 2013-14ல் ஒரு ஹெக்டேர் நெல் சாகுபடி செய்ய ரூ.74,000 செலவாகிறது என தெரிவித்துள் ளது.

ஆனால், அரசு நிவாரணமாக வழங்க அறிவித்துள்ள தொகை யான ரூ.13,500 என்பது மிகவும் குறைவானது. இதன்படி பார்த்தால் ஏக்கருக்கு ரூ.5,400 மட்டுமே நிவாரணமாக கிடைக்கும். இது எந்தவகையிலும் விவசாயிகளின் நஷ்டத்தை ஈடுசெய்யாது. நிவாரண உதவித் தொகையை ஏக்கருக்கு ரூ.25,000 என தமிழக அரசு உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.

தற்போது பயிர்கள் பச்சையாக நன்றாக இருப்பது போல் தோன்றி னாலும், தொடர் மழை காரணமாக ஏறத்தாழ 80 சதவீதம் அளவுக்கு மகசூல் இழப்பு ஏற்படும் வாய்ப் புள்ளது.

எனவே, அதிகாரிகள் உரிய முறையில் கணக்கெடுப்புகளை நடத்தி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரண உதவி கிடைக்கச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக முதல் வர் நேரடியாக கவனம் செலுத்தி, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க ஆவண செய்ய வேண் டும்.

இதேபோன்று கரும்பு, வாழை, தோட்டக்கலைப் பயிர்களுக்கும் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்