கரோனா வைரஸ் மீண்டும் தீவிரமாகப் பரவி வருகிறது. இதை எதிர்த்து போராட நாட்டுக்கு உதவ பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு ஆதரவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக ரூ.71 கோடி ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா 2-வது அலையை எதிர்கொள்ள சில மாநிலங்களில் 1000 படுக்கைகள், தற்காலிக மருத்துவமனைகள், 250 படுக்கைகளைக் கொண்ட ஐசியு வசதிகள் மற்றும் தனிமைப்படுத்தும் வசதிகள் உள்ளிட்டவற்றை அமைக்க ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் அந்தந்த நகரங்களின் அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து அமைக்கப்படும்.
தற்காலிக மருத்துவமனைகளை அமைப்பதற்கான கூட்டாண்மைகளை ஆராய எஸ்பிஐ பல்வேறு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மரபணு வரிசைப்படுத்தல் உபகரணங்கள், ஆய்வகம், தடுப்பூசி ஆராய்ச்சி கருவிகள் உள்ளிட்டவற்றுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
குடிமக்களின் அவசர மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அதன் 17 உள்ளூர் தலைமை அலுவலகங்களுக்கும் எஸ்பிஐ ரூ.21 கோடி ஒதுக்கியுள்ளது. உயிர்காக்கும் சுகாதார உபகரணங்கள், மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்கல், கோவிட்-19 பராமரிப்பு மையங்கள், ஆம்புலன்ஸ்கள், பிபிஇ உபகரணங்கள், முகக்கவசங்கள் ஆகியவை வழங்குவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கூட்டாக செயல்பட எஸ்பிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா கூறும்போது, “கரோனாவுக்கு எதிரான போராட்டதில் சமூகத்துக்கு பங்களிப்பை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். வைரஸை எதிர்த்துப் போராடுவதில் அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்போம்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago