வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கரோனா தொற்றாளர்களுக்கு சத்தான இலவச உணவு: தன்னார்வலர்களின் தன்னிகரற்ற சேவை

By கல்யாணசுந்தரம்

திருச்சி மாநகரில் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கரோனா தொற்றாளர்களுக்கு இல வசமாக சத்தான மதிய உணவை வழங்கி வருகின்றனர் திருச்சியைச் சேர்ந்த தன்னார்வலர்கள்.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. இதில் தமிழகத்திலும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக ரித்து வருவதால், லேசான அறிகுறி களுடன் தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி ஏராள மான கரோனா தொற்றாளர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படு பவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கரோனா தொற்றாளர்களுக்கு தன்னார்வலர்கள் இலவசமாக சத்தான உணவு வழங்கும் பணியில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து களஞ்சியம் அமைப் பின் நிறுவனர் சாம் எல்லீஸ் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

எங்கள் அமைப்பு சார்பில் பல்வேறு உதவிகளை கடந்த 3 ஆண்டுகளாகவே மக்களுக்கு வேசை செய்து வருகிறோம். தற்போது கரோனா தொற்று 2-வது அலை அதிகரித்து வரும் நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஏராளமானோர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு மருந்துகளுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவும் அவசியம் என்பதால், அவர்களுக்கு 14 நாட்களுக்கு தினமும் மதியம் சத்தான உணவை அவர்களது இல்லத்துக்கே தேடிச் சென்று வழங்கி வருகிறோம்.

தற்போது வரை தினமும் 120 பேருக்கு மதிய உணவு வழங்கி வருகிறோம். இது தவிர அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றாளர்கள் 50 பேருக்கும், மருத்துவர்களுக்கும் வழங்கி வருகிறோம். மேலும், அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா தொற்றாளர்களுக்கு காலையில் மோர், மாலையில் தேநீர் மற்றும் சுண்டல் ஆகியவற்றை வழங்கி வருகிறோம்.

இந்த பணியில் ஏறத்தாழ 25-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகிறோம். எங்களை தொடர்பு கொள்ளும் வீடுகளில் தனிமையில் உள்ள கரோனா தொற்றாளர்களுக்கு 14 நாட்களுக்கு இந்த உணவு வழங்கப்படுகிறது.

திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் உரிமையாளர் ரத்தினகுமார், யங் இந்தியன்ஸ் அமைப்பு ஆகிய வற்றின் ஏற்பாட்டில் மே 4-ம் தேதி முதல் இரவு உணவும் வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளோம்.

இதில், மதிய உணவாக ஒவ்வொரு நாளும் ஒரு கலவை சாதம் மற்றும் காய்கறிகள், இரவில் டிபன் வகைகள் வழங்கப் படுகின்றன. உணவு தேவைப்படும் கரோனா தொற்றாளர்கள் 80564 50777, 97860 00427, 97860 00274 ஆகிய எண்களில் தொடர்பு கொள் ளலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்