வரும் 7-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: தலைமைக் கழகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெறும் என, அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்றது. இதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார். வரும் 7ஆம் தேதி அவர் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். அதிமுக ஆட்சியை இழந்தாலும் 65 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் எதிர்க்கட்சியாக அமர்கிறது.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெறும் என, அதிமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அதிமுக தலைமைக் கழகம் இன்று (மே 03) வெளியிட்ட அறிவிப்பில், "நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில், அதிமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம், தலைமைக் கழகத்தில் வருகின்ற 07.05.2021, வெள்ளிக்கிழமை, மாலை 4.30 மணிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், அதிமுகவின் சார்பில் வெற்றி பெற்றுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்