தமிழக அரசின் ஆலோசகர் பதவியை முன்னாள் தலைமைச் செயலர் சண்முகம் ராஜினாமா செய்தார்.
தமிழக தலைமைச் செயலாளராகப் பதவி வகித்தவர் சண்முகம். இவர் தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளராக 2019ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.
1985ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான அவர் தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்கும் முன்னர் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலர், நிதித் துறை செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் இருந்தவர்.
கடந்த ஆண்டு கரோனா முதல் அலை வேகமாகப் பரவியபோது தமிழக டாஸ்க் ஃபோர்ஸ் தலைவராக சண்முகம் ஒருங்கிணைத்து இயக்கினார். அவரது சிறப்பான ஒருங்கிணைப்பு மூலம் கரோனா பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அவரது பணி ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. ஜனவரி 31 அன்று ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமைச் செயலராக ராஜீவ் ரஞ்சன் பதவி ஏற்றார். அதன் பின்னர் சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராகப் பதவியேற்றார்.
புதிய அரசு அமைந்ததால் சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago