உங்கள் ஒத்துழைப்பும், ஆலோசனையும் தேவை என தன்னை வாழ்த்திய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்றது. இதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். வரும் 7 ஆம் தேதி அவர் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார்.
அதிமுக ஆட்சியை இழந்தாலும் 65 இடங்களை கைப்பற்றியதன் மூலம் எதிர்க்கட்சியாக அமருகிறது. இந்நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை அளித்த முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
“தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் @mkstalin”
எனத்தெரிவித்துள்ளார்.
அவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ள ஸ்டாலின் உங்கள் ஒத்துழைப்பும், ஆலோசனையும் தேவை என பதிவிட்டுள்ளார்.
ஸ்டாலின் ட்விட்டர் பதிவு:
“@EPSTamilNadu எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை!
ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்”
இவ்வாறு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் நாகரிக அரசியலை எப்போதும் பேண விரும்பும் ஸ்டாலின் தற்போதும் அதை தனது நன்றியின் மூலம் கவுரவம் பார்க்காமல் உங்கள் ஆலோசனை தேவை என வலியுறுத்தியுள்ளது அரசியல் ஆர்வலர்களால் வரவேற்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago