தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து முதல்வர் பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி நேரடியாக மோதியது. இரண்டு அணிகள் தவிர அமமுக, மநீம கூட்டணி அமைத்து போட்டியிட்டன. நாம் தமிழர் தனியாக நின்றது. கடும் பிரச்சாரத்திற்கிடையே ஏப் 6 அன்று நடந்து முடிந்தது சட்டப்பேரவை தேர்தல். இதில் திமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது. திமுக கூட்டணி 159 இடங்களும், திமுக தனியாக 125 இடங்களும் உதய சூரியன் சின்னத்தில் 8 இடங்களும் வென்றது.
அதிமுக கூட்டணி தோல்வியை தழுவியது. அதிமுக கூட்டணி 75 இடங்களும் அதிமுக 65 இடங்களும் பாமக 5, பாஜக 4, இதரவை 1 என 75 இடங்களையும் பெற்றது. திமுக அறுதிப்பெரும்பான்மை பெற்றதால் அதிமுக ஆட்சியை இழந்தது. இதையடுத்து முதல்வர் பழனிசாமி இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சேலத்திலிருந்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago