கோவை தெற்கு தொகுதியில் மநீம கமல்ஹாசன் தோல்வியடைந்த நிலையில், 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள பாஜக சார்பில் வானதி சீனிவாசன், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ துரைசாமி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்துல் வகாப் ஆகியோர் உட்பட 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, கமல்தான் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, மநீம வேட்பாளர் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். அவருக்கு அடுத்த இடங்களை காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் பிடித்து வந்தனர்.
இந்நிலையில் 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்று பேரவைக்குள் நுழைந்ததற்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து பாஜக சார்பில், எம்.ஆர்.காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
» தாராபுரத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்; துணை ஆணையர் பேச்சுவார்த்தை
» கோவை தெற்கு யாருக்கு?- வானதி முன்னிலை; கமல் பின்னடைவால் பரபரப்பு
இதற்கிடையே கடந்த சில சுற்றுகளாக வானதி சீனிவாசன் முன்னிலை வகித்து வந்தார். தற்போதைய தகவலின் அடிப்படையில் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago