புதுச்சேரி தேர்தல்: காமராஜ் நகர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜான்குமார் வெற்றி  

By அ.முன்னடியான்

புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றார்.

புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக சார்பில் ஜான்குமாரும், காங்கிரஸ் - திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ஷாஜகானும் போட்டியிட்டனர்.

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்த நிலையில், நிறைவாக 16,687 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷாஜகான் 9,458 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

இதன் மூலம் 7,229 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றார். காலாப்பட்டு தொகுதியில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அமைச்சரான ஷாஜகான், இந்த முறை தொகுதி மாறி காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்துள்ளார்.

மேலும் இத்தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சர்மிளா பேகம் 1,955 வாக்குகள், அமமுக வேட்பாளர் முனிசாமி 430 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினர். நோட்டாவில் 636 வாக்குகள் பதிவாகின

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்