தஞ்சாவூரில் நகையின் தரம் குறைந்ததால் நகைக்கடை மீது தாக்குதல்; இருவர் கைது

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூரில் நகையின் தரம் குறைந்ததால் நகைக்கடையில் புகுந்து தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் காந்திஜி சாலையில் தனியார் ஒருவருக்கு சொந்தமான நகைக்கடை செயல்பட்டு வருகிறது.

இந்த நகைக்கடையில் பூதலூர் அடுத்த செல்லப்பன்பேட்டையை சேர்ந்த நேதாஜி என்பவர் தனது உறவினர்களுடன் வந்து நகை வாங்கி வீட்டுக்கு சென்றார்.சில தினங்கள் கழித்து நகையை சோதித்தபோது, நகையின் தரம் குறைவாக இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, நேதாஜி உள்ளிட்ட 3 பேர் நேற்று முன்தினம் (ஏப். 29) நகை கடைக்குள் புகுந்து அங்கிருந்த பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கடையில் இருந்த பணியாளர்களை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த தாக்குதல் காட்சி கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து, நகைக்கடை உரிமையாளர் கமல் சந்த் ஜெயின் தஞ்சாவூர் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நேதாஜி உள்ளிட்ட 2 பேரை இன்று (மே 1) கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்