சிவகங்கையில் போட்டியிட்ட அதிமுகவின் சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், எப்படியும் ஜெயித்தாக வேண்டும் என்ற முனைப்பில் ஓட்டுக் ‘கவனிப்பு’களை தாராளமாகவே செய்தாராம். ஆனால், தங்களுக்கு சீட் கிடைக்காத ஆதங்கத்தில் இருக்கும் அமைச்சர் பாஸ்கரன் தரப்பு அநியாயத்துக்கு உள்ளடி வேலைபார்த்து செந்தில்நாதனின் நிம்மதியைக் கெடுத்துவிட்டதாம். இதனிடையே, அமமுக வேட்பாளர் அன்பரசன் ஒவ்வொரு பூத்திலும் 100 ஓட்டுக்கு காசு கொடுத்தாராம். காசு வாங்கியவர்கள் கண்ணியமாக(!) நடந்து கொண்டாலே அன்பரசனுக்கு சுமார் 40 ஆயிரம் ஓட்டுகள் நிச்சயமாம். இதனிடையே, ஓட்டுக்குக் கொடுத்த காசு வீட்டுக்குப் போய்ச் சேராத விவரங்களைத் தெரிந்துகொண்ட செந்தில்நாதன், தொகுதிக்குட்பட்ட அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் மூவரையும் அழைத்து, “உங்கள் ஒன்றியத்தில் எத்தனை பேருக்கு காசு கொடுத்தீர்கள்... யாருக்கெல்லாம் கொடுத்தீர்கள்” என்று பகுதி வாரியாக பட்டியல் கேட்டிருக்கிறாராம். கட்சியின் மாவட்ட செயலாளராகவும் இருப்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு கணக்கு எசகுபிசகாக வந்தால் உள்ளடி ஆட்களை செந்தில்நாதன் விட்டுவைக்க மாட்டார் என்கிறார்கள் அவரது விசுவாசிகள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago