விருதுநகரில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பெண் காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

By இ.மணிகண்டன்

விருதுநகரில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பெண் காவலர் ஒருவர் மயங்கி விழுந்து இன்று காலை உயிரிழந்தார்.

விருதுநகர் சூலக்கரையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் கனிமுத்து (44). கடந்த ஒரு வாரமாக சளி மற்றும் காய்ச்சலால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் கடந்த இரு நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. மருத்துவமனைக்கு செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு இன்று காலை வந்தார். அப்பொழுது திடீரென மயங்கி விழுந்தார்.

இதைப் பார்த்த மற்ற காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல்துறை வாகனம் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

சற்று நேரத்தில் பங்கு கனிமுத்து உயிரிழந்தார். இவருக்கு ராஜா என்ற கணவரும் ராஜஸ்ரீ (11) என்ற மகளும் உள்ளனர்.

பெண் 8 கனிமுத்து திடீர் இறப்பு போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்