தனிநபரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி முகநூல் கணக்கு மூலம் பணம் பறிக்கும் கும்பல்: மதுரை சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை

By என்.சன்னாசி

தனிநபரின் புகைப்படத்தைப் பயன் படுத்தி போலி முகநூல் கணக்குத் தொடங்கி, அவரது நண்பர்களிடம் உதவி கேட்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக பொதுமக்கள் விழிப் புடன் இருக்க வேண்டும் என்று மதுரை சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்தனர்.

டிஜிட்டல் உலகில் இணையவழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதி கரித்து வருகின்றன. வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி சேமிப்புக் கணக்கு, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களைப் பெற்று பணம் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.

சிலர் கடன் வழங்குகிறோம் என்று கூறியும் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். பரிசுத்திட் டமொன்றில் நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். குறிப் பிட்ட தொகை செலுத்தினால் பரிசுப்பொருட்களை அனுப்பி வைப்போம் என்று கூறியவர்களின் பேச்சை நம்பி, பணத்தை இழந் தவர்களும் அதிகம்.

தற்போது அவசரத் தேவைக்கு பண உதவி கேட்பதுபோல் நடித்து பண முறைகேடு செய்யும் சம் வங்கள் அதிகரித்துள்ளன. முக நூல், வாட்ஸ் ஆப்பில் வைக்கப் பட்டுள்ள (ப்ரோபைல்) தனிநபர் புகைப்படங்களை திருடும் சிலர், அதே பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்குகின்றனர்.

பின்னர் சம்பந்தப்பட்டவரின் நண் பர்களுக்கு மருத்துவம் உள் ளிட்ட அவசரத் தேவைக்காக பணம் தந்து உதவுமாறு உருக்கமாகப் பதிவிடுகின்றனர். தாங்கள் குறிப் பிடும் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்துமாறு கூறுகின்றனர். இதை நம்பி பணம் செலுத்தும் பலர் பணத்தைப் பறிகொடுத்து ஏமாந்து விடுகின்றனர்.

அண்மையில் இதுபோன்று பணத்தைப் பறிகொடுத்த 10-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை சைபர் கிரைம் போலீஸில் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறி யதாவது:

முகநூல், வாட்ஸ் ஆப்பில் தனிநபர், குடும்பத்தினர் புகைப் படங்களை பதிவு செய்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இளம் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இரு க்க வேண்டும். பெண்கள் பற்றிய தகவல்களை அறிந்து காதலிப்பதுபோல் நடித்து ஏமாற்றுவது. புகைப்படத்தைத் திருடி, அவற்றை தவறாகச் சித் தரித்து பணம் பறிப்பது உள் ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரி த்துள்ளன.

தற்போது தனிநபர் புகைப் படங்களை பயன்படுத்தி போலி முகநூல் கணக்குத் தொடங்கி, அவர்களின் நண்பர்களிடம் பண உதவி கேட்டு சிலர் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இந்த முகநூல் கணக்குகள் போலி எனத் தெரியாத பலர், தங்கள் நண்பர் அவசர மருத்துவத் தேவைக்கு பணம் கேட்கிறார் என நினைத்து, வங்கிக் கணக்கில் பணத்தை அனுப்பி விடுகின்றனர். பின்னர் ஏமாற்றப்பட்டது அறிந்து புகார் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலும் வடமாநிலங் களைச் சேர்ந்தவர்களே இது போன்ற குற்றங்களில் ஈடுபடுகின் றனர். ஆன்லைன் பணப்பரிவர்த் தனையில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். அறிமுக மில்லாத யாரிடமும் தங்களைப் பற்றிய தகவல்களை தெரிவிக்கக் கூடாது என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்