போராட்டமாக இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை: இன்று (டிசம்பர் 3) மாற்றுத் திறனாளிகள் தினம்

By பி.டி.ரவிச்சந்திரன்

இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி, வாய்ப்புகள் பிற நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவாக உள்ளதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மாற்றுத் திறனாளிகள் என உலக சுகாதார நிறுவன ஆய்வுகள் தெரி விக்கின்றன. இந்தியாவில் 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி 121 கோடி மக்களில் 2.21 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 2.3 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகள். அவர் களுக்காக, மத்திய அரசு உதவியு டன் தமிழக அரசு 60-க்கும் மேற் பட்ட நலத்திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறது.

எனினும், இத்தகைய திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளைச் சென்ற டைவது சிக்கலாகவே உள்ளது. இதுகுறித்து காந்திகிராமம் கிராமி யப் பல்கலைக்கழக மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு மைய இயக்குநரும், பேராசிரியருமான எம்.பி. போரையன் கூறியதாவது:

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க் கையும், வளர்ச்சியும் இன்றளவும் போராட்டமாகவே இருந்து வருகி றது. அரசு வழங்கும் சலுகைகள், பல்வேறு உதவிகள் கணிசமான மாற்றுத் திறனாளிகளை சென்ற டையவில்லை. அரசின் நலத்திட்டங் கள் குறித்த விழிப்புணர்வும் குறைவாக உள்ளது. அறிந்திட வாய்ப்பிருந்தாலும் சலுகைகள், உதவிகள் பெறுவது குதிரைக்கொம் பாகவே உள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் பார்வையிழந்த குழந்தைகள், வளரி ளம் பெண்கள் உள்ளிட்டோரை வீட்டில் தனியாக விட்டுவிட்டு பெற் றோரால் வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் இவர்களின் வருவாய் பாதிக்கப்பட்டு, அக்குழந் தைகளுக்கு போதுமான சத்துள்ள உணவுகளை வழங்க முடிய வில்லை. இதைப் போன்ற குடும் பங்கள் மீது அரசு தனிக்கவனம் செலுத்தி உதவி செய்ய வேண்டும்.

வயதான பெற்றோரின் பராமரிப் பில் நடமாட்டமின்றி உள்ள பல மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை, பெற்றோர்களின் மறைவுக்குப்பின் கேள்விக்குறியாகி விடுகிறது. இது போன்ற மாற்றுத் திறனாளிகளை அரசோ, தொண்டு நிறுவனங் களோ கடைசிவரை பராமரிக்க உத்தரவாதம் அளிக்கவேண்டும். ஆண், பெண் மாற்றுத் திறனாளிக ளுக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பது, அவர்களை பாதிக்கும் மற்றொரு பிரச்சினை. அரசே சுயம்வரங்களை நடத்தி மாற்றுத் திறனாளிகளின் மணவாழ்க்கை மலர்ந்திட உதவலாம். மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் உண் மையான மறுமலர்ச்சியை ஏற்படுத் துவது நம் அனைவரின் கடமை யாகும் என்று அவர் கூறினார்.

‘மாணவராக இருந்தபோது, இரண்டு கால்களையும் இழந்த ஒருவரை பார்த்தபோதுதான், புதிய காலணிகளுக்காக அடம்பிடித்து அழுவதை நிறுத்தினேன்’ என்று புகழ்பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் தெரி வித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும், ‘மாற்றுத் திறனாளி களுக்கு, தான் தயாரித்த எடை குறைந்த செயற்கை அவயத்தைத் தான் எனது மிகச்சிறந்த பங்களிப் பாக கருதுகிறேன்’ என்று குறிப் பிட்டார். இதைப்போல, ஒவ்வொரு வரின் மனதிலும் மாற்றத்தை ஏற் படுத்துவதுதான் மூலம் மட்டுமே, மாற்றுத் திறனாளிகளுக்கான உண்மையான சமூக பாதுகாப்பை உருவாக்க முடியும்.

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் அதிகம்

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 16.42 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இதில் 48.2 சதவீதம் ஆண்கள், 51.8 சதவீதம் பெண்கள். கிராமப் பகுதிகளில் 57.5 சதவீதம் பேரும், மீதமுள்ள 42.5 சதவீதம் பேர் நகர்புறங்களிலும் வசிக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளில், தமிழகத்தில் மட்டுமே, ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி. போரையன்



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்