தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 160 முதல் 170 தொகுதிகளில் வெற்றி பெறும் என ரிபப்ளிக் டிவி நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல், புதுவை, கேரளா சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்டவை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 8 கட்டமாகவும், அசாமில் 3 கட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
பொதுவாக தேர்தல் முடிந்த பின்னர் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு அன்று மாலையே வெளியாகும். இம்முறை மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்ததால், அந்தத் தேர்தல் முடிந்த பின்னரே கருத்துக்கணிப்பு வெளியாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் மற்ற மாநிலங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
மேற்கு வங்கத்தில் கடைசிக்கட்டத் தேர்தல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு இன்று(ஏப்ரல் 29) மாலை 7 மணி அளவில் வெளியானது.
» முடிந்தது மேற்குவங்க தேர்தல்; மே 2-ம் தேதி 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை
» மாநில அரசுகளுக்கு ரூ. 400 விலையில் கோவேக்ஸின் தடுப்பூசி: விலையை குறைத்தது பாரத் பயோடெக்
அதன்படி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்து ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.
இதன்படி திமுக கூட்டணி 160 முதல் 170 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி 58 முதல் 69 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமமுக 4 முதல் 6 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகள் வரையிலும் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago