முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார் 

By செய்திப்பிரிவு

முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91.

செ.அரங்கநாயகம் முன்னாள் கல்வி அமைச்சர் ஆவார். எம்.ஏ, பிஎட், பி.எல் பட்டதாரியான அவர், எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவில் இணைந்து, 1977-ம் ஆண்டு அதிமுக சார்பில் கோவை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். எம்ஜிஆர் அமைச்சரவையில் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

1980-ல் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் கோவை மேற்கு தொகுதியில் வென்றார். 1980-ம் ஆண்டும் அமைச்சரானார். பின்னர் 1984-ம் ஆண்டு தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

பின்னர் 1991ஆம் ஆண்டு தொண்டாமுத்தூரில் போட்டியிட்டு வென்ற அவர் ஜெயலலிதா அமைச்சரவையில் பொறுப்பு வகித்தார். பிறகு ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2006ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். பின்னர் 2014ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்தும் விலகினார். அதன் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார்.

வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் மூச்சுத்திணறல் காரணமாக கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அரங்கநாயகம் இன்று காலமானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்