தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர் தாக்கப்பட்ட வழக்கில் கைதான ஓட்டுனருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
தஞ்சாவூர் பாலம்புதூரைச் சேர்ந்த ஓட்டுனர் சக்திகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த இருவர் 9.4.2021 இரவில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விவகாரத்தில் பயிற்சி டாக்டருக்கும் சிகிச்சைக்கு வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்தத் தகராறில் இரும்பு நாற்காலியால் பயிற்சி டாக்டரை தாக்கியதாக நான் உட்பட பலர் மீது தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
» கரோனா சோதனை முடிவுக்குக் காத்திராமல் 27 கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் பார்த்த கோவை அரசு மருத்துவர்கள்
இந்தச் சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை. விபத்தில் காயமடைந்தவர்களை பார்க்க வந்த என்னை தவறுதலாக வழக்கில் சேர்த்துள்ளனர். எனவே ஜாமீன் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மனுதாரர் அரசு பயிற்சி டாக்டரை தாக்கியுள்ளார். விசாரணை தொடக்கக்கட்டத்தில் தான் உள்ளது. ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.
இதையடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago