தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தனர்.
தற்போது மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் அதேபோன்ற பாதிப்பு மீண்டும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஊரடங்கை எதிர் கொள்வதற்கு பொதுமக்களும் தயாராக இல்லை.
» வாக்கு எண்ணும் மையத்துக்குச் செல்லும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு இன்று கரோனா பரிசோதனை
» நெல்லை மாவட்டத்தில் 872 பேருக்கு கரோனா பாதிப்பு: பாளை. சிறை அலுவலக கண்காணிப்பாளர் மரணம்
இருப்பினும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago