பாளை சிறையில் கைதி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பாபநாசம், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
பாளையங்கோட்டை சிறையில் கைதி முத்து மனோ மற்றும் அவரது நண்பர்களை அதே சிறையில் உள்ள கைதிகள் சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முத்து மனோ, நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.
முத்து மனோவின் உடல் கூராய்வை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். சிறையில் கலவரம் நடைபெறும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்ட சிறைத் துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், முத்து மனோ கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், முத்து மனோ கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிறைத் துறையினர் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரேதப் பரிசோதனை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது.
இதையடுத்து, பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொள்ளவேண்டும்.
அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 9-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago