தி.மலை கிரிவலப் பாதையில் காவல்துறையினர் குவிப்பு: கிரிவலம் செல்லும் பக்தர்களைத் தடுக்க நடவடிக்கை

By இரா.தினேஷ் குமார்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சித்ரா பவுர்ணமியையொட்டி இன்று கிரிவலம் செல்லும் பக்தர்களைத் தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

நினைக்க முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை. பஞ்ச பூதங்களில் அக்னி தலமாகவும் உள்ளது. இங்குள்ள அண்ணாமலையை, பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்து வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது சிவ பக்தர்களின் நம்பிக்கையாகும். அதனால்தான், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை மீது ஏற்றப்படும் மகா தீபமானது, மோட்ச தீபம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில் கார்த்திகை தீபத்தைப் போல் கூடுதல் சிறப்பைப் பெற்றது சித்ரா பவுர்ணமியாகும்.

இந்த நிலையில், கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சித்ரா பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்ல, பக்தர்களுக்கு இரண்டாவது ஆண்டாக இன்று (ஏப். 26) தடை விதிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு பங்குனி மாதத்தில் தொடங்கிய தடை உத்தரவு, 14-வது மாதமாகத் தொடர்கிறது. தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தாலும், ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, தடையை மீறிக் கடந்த மூன்று மாதங்களாக பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். காவல்துறையினரும் பெரிய அளவில் தடுப்புகளை ஏற்படுத்தவில்லை.

கரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ளதால், கிரிவலம் செல்ல முயலும் பக்தர்களைத் தடுக்க, கிரிவலப் பாதையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 14 கி.மீ. தொலைவு உள்ள கிரிவலப் பாதையில், 12-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு உள்ளதால், பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும், மாலையில், குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயங்கியதால் பக்தர்களின் வருகை தடைப்பட்டுப் போனது. இருப்பினும் கிரிவலம் செல்ல முயன்ற உள்ளூர் மற்றும் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த சில பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையில், சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வழக்கமாக நடைபெறும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளால், அண்ணாமலையார் கோயில் உள்ளே சென்று வழிபடவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்