சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே எரிவாயு தகன மேடை வளாகத்தில் நகராட்சி ஊழியர்கள் பிளாஸ்டிக் குப்பைகளை எரிப் பதால் நோயாளிகள் மூச்சு திணறலால் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள நகராட்சி எரிவாயு தகன மேடை வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புறநோயாளியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். உள்நோயாளி களாக 700-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மாணவர்கள் என 800-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.இதுதவிர நோயாளிகளை பார்ப் பதற்காக தினமும் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் வந்து செல் கின்றனர்.
இந்நிலையில் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள நகராட்சி எரிவாயு தகன மேடை வளாகத்தில், நகரில் சேகரிக் கப்படும் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர். இதனால் மயானம் முழுவதும் குப்பை மேடாக காட்சி தருகிறது. மேலும் குப்பையை திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் உரமாக மாற்றும் பிரிவும் அங்குள்ளது.
ஆனால், குப்பையை உரமாக மாற்றாமல் அவற்றை நகராட்சி ஊழியர்கள் எரித்து வருகின்றனர். இதில் குப்பையை எரிப்பதால் உண்டாகும் புகை அரசு மருத்துவமனைக்குள் புகுகிறது. இதனால் நோயாளிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதோடு, மூச்சுத் திணறலும் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘மயானத்தை நகராட்சி அதிகாரி கள் குப்பைக் கிடங்காக மாற்றி விட்டனர். குப்பையை எரிப்பதால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக நகராட்சி அதிகாரி களிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. என்றார்.
இதுகுறித்து நகராட்சி பணியாளர்கள் கூறும்போது, ‘சுந்தரநடப்பில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பையைக் கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதனால் வேறுவழியின்றி மயானத்திலேயே கொட்டி வைக்கிறோம். மேலும் குப்பையை பயன்படுத்தி உரம் தயாரித்து வருகிறோம். மேலும் எங்களுக்கே தெரியாமல் சிலர் குப்பையில் நெருப்பு வைத்து விடுகின்றனர்,’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago