முழு ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: டிஜிபி ஜே.கே.திரிபாதி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா 2-வது அலை பரவலை தடுக்கும் விதத்தில் தமிழகம் முழுவதும் இன்று முழுஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், “முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் போலீஸார் ஊரடங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். வீட்டை விட்டு வெளியே
வரும் அனைவர் மீதும் வழக்குப்பதிவுசெய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்” என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி எச்சரித்துள்ளார்.

முகக் கவசம் அணியாதவர்கள், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது. முகக் கவசம் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.200 அபராதமும், தனிமனித இடைவெளியைக் கடை
பிடிக்காதோருக்கு ரூ.500 அபராதமும்விதிக்கப்பட்டு வருகிறது.

கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த 17 நாட்களில் மட்டும் முகக் கவசம் அணியாதவர்கள் மீது 5 லட்சத்து 38 ஆயிரத்து 663 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 784 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை காவல் துறையினர் செயல்படுத்தும் விதம் குறித்து, காவல் துறை அதிகாரிகளுடன் டிஜிபிஜே.கே.திரிபாதி நேற்று ஆலோசனை நடத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்