சிலிண்டர் விநியோகிக்க வரும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம்: எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சிலிண்டர் விநியோகிக்க வரும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால், தொடர்புடைய ஏஜென்சியிடம் வாடிக்கையாளர்கள் புகார் கூறலாம் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தமிழகத்தில் 2.38 கோடி வாடிக்கையாளர்களுக்கு வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன. இந்த நிறுவனங்களின் ஏஜென்சி ஊழியர்கள் நாளொன்றுக்கு சராசரியாக 5 லட்சம் சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றனர்.

இதற்கிடையில், கரோனா பரவல் 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்
என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு, சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு ஏஜென்சிசார்பில் கையுறை, கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவை வழங்கப்படுகின்றன. ஆனால், வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்ய வருபவர்கள் முறையாக முகக் கவசம் அணிவதில்லை என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் பரவலாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, ஏஜென்சி ஊழியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கியுள்ளன. சிலிண்டர் விநியோகம் செய்யவாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு செல்லும்போது, ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு சிலிண்டரை வழங்க வேண்டும். சிலிண்டருக்கான கட்டணத்தை பணமாக பெறுவதற்கு பதிலாக, முடிந்த வரை பாயின்ட்ஆஃப் சேல் கருவி மூலம், மின்னணு முறையில் வசூலிக்க வேண்
டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால், சம்பந்தப்பட்ட ஏஜென்சியிடம் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்