புதுச்சேரியில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய இடங்கள் வெறிச்சோடி உள்ளன.
நாடு முழுவதும் கரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வரும் சூழலில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை, பல்வேறு மாநிலங்கள் மீண்டும் அமல்படுத்தத் தொடங்கியுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. நாளை முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது.
அதேபோல் புதுச்சேரியிலும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை 52 ஆயிரத்து 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 737 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாகப் புதுச்சேரி மாநிலத்திலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களான சனி, ஞயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று (ஏப்.23) இரவு 10 மணி முதல் புதுச்சேரியில் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது.
» கரோனா ஊரடங்கால் பாதிக்கப்படும் தனியார் நிறுவன ஊழியர்கள்: வாழ்வாதார திட்டம் கோரி வழக்கு
» புதுச்சேரியில் கரோனாவுக்கு ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு; புதிதாக 899 பேர் பாதிப்பு
திங்கள்கிழமை அதிகாலை 5 மணி வரை தொடர்ந்து 55 மணி நேரம் ஊரடங்கு அமலில் இருக்கும். இந்நிலையில் இன்று (ஏப்.24) புதுச்சேரியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் குறைவான பயணிகளே பயணம் செய்து வருகின்றனர்.
அதுபோல், பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்து காணப்படுவதால் நகரின் முக்கிய வீதிகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடியுள்ளன. மேலும் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களைப் பிடித்து காவல்துறையினர் அபராதம் விதிப்பதோடு, அவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
''கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதை மக்கள் உணர்ந்து வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கரோனாவின் கோரப்பிடியில் இருந்து நாம் தப்பிக்க அரசு அறிவித்துள்ள தளர்வுகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் தேவையின்றி சுற்றித் திரிவதைத் தவிர்க்க வேண்டும்'' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago