ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் கத்தோலிக்க தேவாலயங்களில் சனிக்கிழமை மாலை திருப்பலி: தமிழக ஆயர் பேரவை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஞாயிற்றுக்கிழமைகளில் கரோனா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், கத்தோலிக்க தேவாலயங்களில் வாராந்திர திருப்பலி சனிக்கிழமை மாலை நிறைவேற்றப்படும் எனதமிழக ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக ஆயர் பேரவை தலைவரும், மதுரை உயர்மறைமாவட்ட பேராயருமான அந்தோணி பாப்புசாமி அனைத்து மறைமாவட்ட ஆயர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, ஞாயிறு திருப்பலியை முந்தைய நாளான சனிக்கிழமை மாலை நிறைவேற்றுமாறு பங்குத் தந்தையர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

திருமணங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டிருப்பின் இதுகுறித்து சம்பந்தப்பட்டஉள்ளாட்சி அமைப்பில் முன்அனுமதி பெற வேண்டியது அவசியம். ஞாயிற்றுக்கிழமைகளில் புனித நிகழ்வுகள் ஏதும் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் அவற்றை தள்ளிவைப்பது அல்லது சனிக்கிழமைக்கு மாற்றியமைப்பது சிறந்தது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆயர் பேரவையின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு திருப்பலி இன்று (சனிக்கிழமை) மாலை நிறைவேற்றப்படுகிறது. இதுதொடர்பாக அந்தந்த பங்குத்தந்தையர்கள் இறைமக்களுக்கு வாட்ஸ்-அப்,எஸ்எம்எஸ் மூலமாக நேற்று தகவல் அனுப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்